நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி அருகே சிலமலை பிள்ளைமார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி 50. இவரது கணவர் பொன்ராஜ் 60.
இருவரும் வேலைக்கு சென்று விட்டு ரோட்டில் நடந்து வந்துள்ளனர். எதிரே வேகமாக வந்த கார் பொன்ராஜ் மீது மோதியது.
இதில் பலத்த காயம் பொன்ராஜ் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சூலப்புரத்தைச் சேர்ந்த டிரைவர் மோகன்குமார் மீது போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.