நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கேரளா, வண்டிப்பெரியாறைச் சேர்ந்தவர் சித்திக் 43. குமுளியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். தனது காரில் கம்பம் வந்து பழங்களை வாங்கிக் கொண்டு குமுளி நோக்கி திரும்பும் போது கூடலுார் துர்க்கை அம்மன் கோயில் அருகே எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதியது.
இதில் பலத்த காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய கூடலுாரைச் சேர்ந்த கார் டிரைவர் கோபி மீது வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

