UPDATED : ஆக 29, 2026 06:14 PM
ADDED : ஆக 29, 2026 06:02 PM
கம்பம்:கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், மாணவர்கள் மன அழுத்தங்கள் குறைய புத்தாக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இப் பள்ளியில் நேற்று நடந்த புத்தாக்க நிகழ்ச்சி எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். சிந்தனையை தூண்டும் விளையாட்டு சாதனம், அறிவு கூர்மையை அதிகரிக்கும் விளையாட்டு, குதிரை, ஒட்டகங்களில் ஏறி சவாரி செய்தல் நடந்தது.
மேசை வில்வித்தை, மினி ஏர் ஹாக்கி, பலூன் சுடுதல், நாணய குழப்பம், கிரேஷி டாக்சி, தவளை சுத்தி விளையாட்டு என பல்வேறு விளையாட்டுத்தளில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை பள்ளி தாளாளர் காந்த வாசன் துவக்கி வைத்தார். இணை செயலர் சுகன்யா, முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன், யோகா ஆசிரியர்கள் ராஜேந்திரன், ரவிராம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
