/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிரந்தர கமிஷனரை நியமிக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
/
நிரந்தர கமிஷனரை நியமிக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
நிரந்தர கமிஷனரை நியமிக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
நிரந்தர கமிஷனரை நியமிக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : மே 17, 2025 03:35 AM
கூடலுார: கூடலுார் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்படுவதால் நிரந்தர கமிஷனரை நியமிக்க நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூடலுார் நகராட்சி கூட்டம் தலைவர் பத்மாவதி தலைமையில் நடந்தது. கமிஷனர் கோபிநாத், நகராட்சி பொறியாளர் பன்னீர், மேலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.
நகராட்சியில் பல மாதங்களாக கமிஷனர், நகராட்சி பொறியாளர், நகர திட்ட ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது. சின்னமனுார் கமிஷனர், பொறியாளர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.
இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளது. உடனடியாக அதிகாரிகளின் நியமிக்க அரசு முன்வர வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
புது பஸ் ஸ்டாண்டில் உள்ள வாகன நிறுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் கழிப்பறையில் கட்டணம் வசூலிக்கும் உரிமைக்கு டெண்டர் விடுவது, மழைநீர் வடிகால், சிறு பாலம் அமைப்பது உள்ளிட்ட 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.