/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் ஆய்வு
/
தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் ஆய்வு
தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் ஆய்வு
தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் ஆய்வு
ADDED : ஜன 21, 2024 05:10 AM
கூடலுார்: கூடலுார் நகராட்சியில் தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் நகராட்சி தலைவர், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.
சில மாதங்களுக்கு முன் கூடலுார் நகராட்சிக்கு தனியாக லோயர்கேம்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் 3.15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
அங்கிருந்து பம்பிங் செய்து 7 நீர்த்தேக்க தொட்டி மூலம் குடியிருப்புகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இருந்த போதிலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அவ்வப்போது முழுமையாக தண்ணீரை நிறுத்துவதாலும் திடீரென நீர் திறப்பை அதிகரிப்பதாலும் லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் உள்ள மோட்டாரில் மண், கழிவுகள் சிக்கிக் கொள்கிறது. இதனை அகற்றி மீண்டும் சப்ளை செய்ய மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விடுகிறது.
இப்பிரச்னையில் இருந்து தீர்வு காணப்பட்டு தினந்தோறும் குடிநீர் சப்ளை செய்வதற்காக நகராட்சி தலைவர் பத்மாவதி, கமிஷனர் காஞ்சனா மற்றும் 21 வார்டு கவுன்சிலர்களும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
குடிநீர் பம்பிங் செய்வதில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க புதிதாக 75 குதிரை திறன் கொண்ட மோட்டார் பொருத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் குடிநீர் பம்பிங் செய்யும்போது 'ஏர் லாக்' ஆகாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் ஆலோசிக்கப்பட்டது.

