ADDED : பிப் 05, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் யாதவ குல சீலைய கும்பு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கருப்பசுவாமி கோயில் கட்டுமான பணி முடிவடைந்து, நேற்று வாஸ்து சாந்தி பூஜை நடந்தது.
கருப்பசுவாமி,விநாயகர், பிச்சையம்மாள், நாகம்மாள் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கணபதி ஹோமம், கோமாதா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. யாக சாலையில் இருந்து புனித நீர் கும்பத்தை கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருப்பசுவாமி சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சுருளி மலை ஐயப்பன் கோயில் அர்ச்சகர் கணேஷ் பூஜை நடத்தினார்.
பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.