/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அசல் மதிப்பெண் சான்று பெற தனித்தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்
/
அசல் மதிப்பெண் சான்று பெற தனித்தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்
அசல் மதிப்பெண் சான்று பெற தனித்தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்
அசல் மதிப்பெண் சான்று பெற தனித்தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : நவ 07, 2025 04:51 AM
தேனி: தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் சாந்தலட்சுமி கூறியதாவது: 2020 செப்., முதல் 2023 ஜூன் வரை பத்தாம் வகுப்பு அரசு பொது, துணைத்தேர்வுகள் எழுதிய தனித்தேர்வர்கள் பலர் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறாமல் உள்ளனர்.
இந்த சான்றிதழ்களை இன்று (நவ.,7) முதல் 2026 பிப்.,4 வரை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களை பெற தேர்வு கூட நுழைவுச்சீட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் சான்றிதழ்கள் விதிகளின்படி அழிக்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் விபரங்களுக்கு அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.