ADDED : ஆக 01, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: விவசாயிகள் நடவு செய்ய உள்ள பயிர்களின் விதைகளை பரிசோதனை செய்து நடவு செய்வுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
விதை பரிசோதனை செய்வதன் மூலம் நல்ல மகசூல், முளைப்புத்திறன், விதையின் தரம் அறிந்து கொள்ள முடியும்.
விதைக்க உள்ள விதை மாதிரிகளை தேனி சுக்குவாடன்பட்டி வேளாண் விற்பனைகுழு வளாகத்தில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் வழங்கலாம்.
ஒரு பயிரின் விதை பரிசோதனை செய்ய ரூ.80 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு ஆய்வகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துஉள்ளனர்.