/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆதார் கியூ.ஆர்., ஸ்கேன் செயலி பயன்படுத்த அறிவுறுத்தல்
/
ஆதார் கியூ.ஆர்., ஸ்கேன் செயலி பயன்படுத்த அறிவுறுத்தல்
ஆதார் கியூ.ஆர்., ஸ்கேன் செயலி பயன்படுத்த அறிவுறுத்தல்
ஆதார் கியூ.ஆர்., ஸ்கேன் செயலி பயன்படுத்த அறிவுறுத்தல்
ADDED : நவ 21, 2025 01:40 AM
தேனி: தேசிய தகவலியல் மைய தேனி மாவட்ட அலுவலர் ஜெகன் கூறியதாவது: ஆதார் நிறுவனமான uidai சார்பில் ஆதார் கியூ.ஆர்., ஸ்கேன் செயலி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செயலியில் கியூ.ஆர்., கோடினை ஸ்கேன் செய்தால் ஆதாரில் உள்ள விபரங்களை காணலாம்.
இந்த விவரங்கள் பரிசோதித்து பணியாளரின் உண்மை தன்மையை தெரிந்து கொள்ளலாம். வேறு ஒருவரின் ஆதார் எண், போட்டோவை மாற்றி தவறான ஆதார் வழங்கினால் ஸ்கேன் செய்யும் போது உரிய எண்ணின் உண்மை விபரம் தெரியவரும்.
இதனை தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த நிறுவனத்தின் மற்றொரு செயலியான எம்.ஆதார் செயலி அனைவரும் அலைபேசியில் வைத்து கொள்ளலாம்.
இந்த செயலி மூலம் ஆதார் பயோ மெட்ரிக் லாக், பி.வி.சி., ஆதார் கார்டு விண்ணப்பித்தல், குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதார் கார்டுகளையும் ஒரே செயலியில் வைத்து கொள்ள உதவும் என்றார்.