/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குளோரினேஷன் செய்து குடிநீர் வினியோகிக்க அறிவுறுத்தல்
/
குளோரினேஷன் செய்து குடிநீர் வினியோகிக்க அறிவுறுத்தல்
குளோரினேஷன் செய்து குடிநீர் வினியோகிக்க அறிவுறுத்தல்
குளோரினேஷன் செய்து குடிநீர் வினியோகிக்க அறிவுறுத்தல்
ADDED : மே 31, 2025 12:39 AM
கம்பம்: கிராமங்களில் வினியோகிக்கும் குடிநீர் கலங்கலாக இருப்பதால் அதனை முறையான குளோரினேஷன் செய்து வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகங்களை பொதுச் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே துவங்கியதால் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. பருவ மழையால் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் கலங்கலாக உள்ளது.
ஆற்றில் பம்பிங் செய்து அப்படியே வினியோகம் செய்கின்றனர். ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் குளோரின் கலக்க வேண்டும். ஊராட்சிகளில் குளோரினேஷன் செய்வது இல்லை. இதனால் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சிகளில் குளோரின் கியாஸ் குழாய் மூலம் செலுத்தப்படுகிறது. ஆனால் ஊராட்சிகளில் அந்த வசதி இல்லை. தற்போது மழை நீரில் தொற்று நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது .
எனவே கண்டிப்பாக ஊராட்சிகள் முறையாக குளோரினேஷன் செய்ய பொதுச் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.