/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நாவல் மரம் வளர்க்க அறிவுறுத்தல்
/
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நாவல் மரம் வளர்க்க அறிவுறுத்தல்
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நாவல் மரம் வளர்க்க அறிவுறுத்தல்
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நாவல் மரம் வளர்க்க அறிவுறுத்தல்
ADDED : செப் 28, 2025 03:34 AM
கம்பம்: பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் நாவல் மரங்களை வளர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் கடந்த 2022 முதல் மரங்களை நடவு செய்து வருகிறது. வரும் 10 ஆண்டுகளில் 13,500 சதுர கி.மீ. பரப்பில் மரங்கள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்து பல்வேறு வகையான மரங்களை நடவு செய்து வருகின்றனர். இந்தாண்டு ஒரு லட்சம் நாவல் மரங்களை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து அறிவுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் வைகை மண்வள பாதுகாப்பு துறையின் கீழ் 5 சரகங்களில் இந்த பணி துவங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில் , 'நாவல் மரங்கள் சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு , அதிக சத்துக்கள் கொண்டது, மருத்துவ குணம் கொண்டது, நமது கலாச்சாரத்துடன் இணைந்தது.
எனவே இந்தாண்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் நாவல் மரங்களை நடவு செய்ய இலக்கு நிட்சையித்து பணிகள் துவங்கி உள்ளது,' என்றனர். கடந்த வாரம் தேனி மாவட்டத்தில் எரசக்கநாயக்கனுார் துணை சுகாதார நிலையம், உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் நாவல் மரங்கள் நடவு செய்யப்பட்டது.