/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உரிமம் உள்ள நிறுவனங்களில் விதைகள் வாங்க அறிவுறுத்தல்
/
உரிமம் உள்ள நிறுவனங்களில் விதைகள் வாங்க அறிவுறுத்தல்
உரிமம் உள்ள நிறுவனங்களில் விதைகள் வாங்க அறிவுறுத்தல்
உரிமம் உள்ள நிறுவனங்களில் விதைகள் வாங்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 11, 2025 03:07 AM
தேனி: ஆடிப்பட்டம் சாகுபடி தொடர்பாக மதுரை, தேனி மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் சிங்காரலீனா கூறியுள்ளதாவது:
ஆடி மாதத்தில் காய்கறிகள், சிறுதானியங்கள், பயறுவகை பயிர்கள் விதைப்பதன் மூலம் வடகிழக்கு பருவமழைக்கு முன் அறுவடை செய்ய இயலும். மகசூல் அதிகம் பெற விதைக்கும் விதைகள் நல்ல முளைப்புதன்மையுடன் இருப்பது அவசியம்.
விற்பனையாளர்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து விதைகள் வாங்கியதும் முளைப்புத்திறனை பரிசோதித்து கொள்ள வேண்டும்.
விற்பனை மையங்களில் விதைகள் இருப்பு, ரகங்களின் விபரம், விலைப்பட்டியல் உள்ளிட்டவற்றை தகவல் பலகையில் காட்சிபடுத்த வேண்டும். விதை பரிசோதனை முடிவுகள், கொள்முதல் ஆவணங்கள், விற்பனை பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். ஆவணங்கள் பராமரிக்காத, தரமற்ற கலப்பு விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விதைகள் வாங்கும் விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டும் விதைகள் வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.