/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தல்
/
கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தல்
ADDED : ஏப் 04, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஒட்டல்கள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவில் தொழிலாளர் துறை, தொழிலகப்பாதுகாப்பு இயக்ககம், தமிழ் வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை, வணிகர் சங்கங்கள், ஓட்டல் சங்கத்தினர் உறுப்பினர்களாக உள்ளனர்.
நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே 15க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

