/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை டிச.,4க்குள் வழங்க அறிவுறுத்தல்
/
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை டிச.,4க்குள் வழங்க அறிவுறுத்தல்
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை டிச.,4க்குள் வழங்க அறிவுறுத்தல்
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை டிச.,4க்குள் வழங்க அறிவுறுத்தல்
ADDED : நவ 28, 2025 08:14 AM
தேனி: வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு வாக்காளர் பட்டியலில் திருத்த பணிக்கான படிவத்தை பூர்த்தி செய்து டிச.,4க்குள் வழங்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுறுத்தி உள்ளார். மேலும், வாக்காளர்களிடம் பெறப்பட்ட படிவங்கள் அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. படிவங்கள் பூர்த்தி செய்ய உதவுவதற்காக அந்தந்த பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த படிவங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். செயலியில் பதிவேற்றம் செய்வதன் மூலமே 2026 வாக்காளர் வரைவு பட்டியலில் இடம் பெறுவது உறுதி செய்யப்படும். எனவே கடைசி தேதி வரை காத்திருக்காமல் பூர்த்தி செய்த படிவங்களை பி.எல்.ஓ.,க்களிடம் வழங்கி வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.