/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குறுவை நெற்பயிருக்கு காப்பீடு ஆக.14 வரை நீட்டிப்பு
/
குறுவை நெற்பயிருக்கு காப்பீடு ஆக.14 வரை நீட்டிப்பு
குறுவை நெற்பயிருக்கு காப்பீடு ஆக.14 வரை நீட்டிப்பு
குறுவை நெற்பயிருக்கு காப்பீடு ஆக.14 வரை நீட்டிப்பு
ADDED : ஆக 02, 2025 12:59 AM
தேனி: குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஆக.14 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பயனடையலாம்.'' என வேளாண் இணை இயக்குனர் சாந்தாமணி தெரிவித்தார்.
அவரது கூறியிருப்பதாவது:
மாவட்டத்தில் 2025 -- 2026 குறுவை நெல் பயிறுக்கு  காப்பீடு செய்யும் பணி  40 கிராமங்களிலும், 8 குறுவட்டங்களிலும்  ஷேமா' என்கிற பொது காப்பீட்டு நிறுவனம்  முன்பதிவு துவங்கியுள்ளது.
விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஆக.14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அறிவித்த கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்யலாம்.
விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசிய  வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த முன்மொழிவு விண்ணப்பம், வி.ஏ.ஓ., வழங்கும் நடப்பு அடங்கல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், பட்டா ,சிட்டா நகல்  மூலம் பதிவு செய்யலாம். மேலும் www.pmfby.gov.in என்ற இணையத்தளம் மூலமாகவும் காப்பீடு செய்யலாம்.   குத்தகைதாரரும் பதிவு செய்யலாம்.
நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.761 பிரிமியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிருக்கு இழப்பு ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ.36 ஆயிரம் கிடைக்கும்.  விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் 14447 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்ப கொண்டு விபரங்களை பெறலாம் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

