/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெற்பயிருக்கு காப்பீடு நவ.30 வரை அவகாசம்
/
நெற்பயிருக்கு காப்பீடு நவ.30 வரை அவகாசம்
ADDED : நவ 19, 2025 06:21 AM

தேனி: சம்பா சாகுபடியில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ., 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவ., 30 வரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதிவு செய்யலாம்.
பதிவு செய்ய அடங்கல், வங்கி புத்தக நகல், பட்டா, சிட்டா, ஆதார் நகலுடன் விண்ணப்பிக்கலாம். ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத்தொகை ரூ. 38,038 ஆகும். இதற்கு பிரீமியம் தொகையாக ரூ. 571 செலுத்த வேண்டும். இயற்கை பேரிடர், பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு தொகை கிடைத்திட பயிர்காப்பீடு செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது 14447 என்ற இலவச தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

