/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
200 எக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் அமல்
/
200 எக்டேரில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் அமல்
ADDED : மே 20, 2025 01:33 AM
தேனி: தமிழக அரசின் வேளாண் திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 20 எக்டேர் வரை உள்ள மானாவாரி நிலங்கள் ஓரிடத்தில் தேர்வு செய்யப்படும்.
அங்கு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கால்நடைகள் வாங்க ரூ.20 ஆயிரம், மண்புழு உர தயாரிப்பு கூடம், வரப்புகளில் நடவு செய்ய மரக்கன்றுகள், ஒரு தேனீ வளர்ப்பு பெட்டி, விதைகள் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் இத்திட்டம் தேனி, போடி ஊராட்சி ஒன்றியங்கள் தவிர மற்ற 6 ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.