/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனவிலங்குகளை கட்டுப்படுத்த நுண்ணறிவு 'வெர்ச்சூல் வேலி'
/
வனவிலங்குகளை கட்டுப்படுத்த நுண்ணறிவு 'வெர்ச்சூல் வேலி'
வனவிலங்குகளை கட்டுப்படுத்த நுண்ணறிவு 'வெர்ச்சூல் வேலி'
வனவிலங்குகளை கட்டுப்படுத்த நுண்ணறிவு 'வெர்ச்சூல் வேலி'
ADDED : ஜூலை 02, 2025 06:55 AM
மூணாறு : தேவிகுளம் தொகுதியில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு வெர்ச்சூல் வேலி திட்டத்தை வனத்துறையினர் செயல்படுத்துகின்றனர்.
தேவிகுளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மூணாறு, மறையூர், தேவிகுளம் உட்பட பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம், அவற்றின் தாக்குதல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் இயற்கை நுண்ணறிவு வெர்ச்சூல் வேலி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக வனவிலங்கு நடமாட்டம் அதிகம் உள்ள 10 'ஹாட் ஸ்பாட்' டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அப்பகுதிகளில் திட்டத்தை செயல் படுத்தும் வகையில் தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜாவின் உள்ளூர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திட்டம் செயல்படும் விதம்: தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்படும்.
அவற்றின் மூலம் தொலைவில் உள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை பதிவு செய்து வனத்துறை அலுவலங்களில் காட்சிகள் கண்காணிக்கப்படும். அது குறித்து உடனடியாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த வனத்துறை சார்பிலான முதன்மை அதிரடி படை மற்றும் அதிரடி படையினருக்கு தகவல் அளிக்கப்படும்.
அவர்கள் விரைந்து சென்று யானை உட்பட வனவிலங்குகளை துரத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு வெர்ச்சூர் வேலி திட்டம் செயல்படுத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூணாறு வனப்பிரிவுக்கு கீழ் கல்லார், நயமக்காடு ஆகிய பகுதிகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.