/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டல்கள், குளிர்பான கடைகளில் சோதனையை தீவிரப்படுத்துங்க! உணவு பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்
/
ஓட்டல்கள், குளிர்பான கடைகளில் சோதனையை தீவிரப்படுத்துங்க! உணவு பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்
ஓட்டல்கள், குளிர்பான கடைகளில் சோதனையை தீவிரப்படுத்துங்க! உணவு பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்
ஓட்டல்கள், குளிர்பான கடைகளில் சோதனையை தீவிரப்படுத்துங்க! உணவு பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்
ADDED : ஏப் 01, 2024 11:56 PM
மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயில் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் அதிகளவில் பழ ஜூஸ்கள், பாட்டீல் குளிர்பானங்களை விரும்பி பருகுகின்றனர். ஆனால் குளிர்பானங்களில் காலாவதி தேதி உள்ளதா, ஜூஸ்கள் நல்ல பழங்களில் தயாரிக்கப்படுகிறா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதே போல் குடிநீர் பாட்டில்கள் பல கடைகளில் காலாவதி தேதி குறிப்பிட்படாமல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் தேனியில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் சோதனையில் ஜூஸ் தயாரிக்க வைத்திருந்த 46 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல் செய்தனர்.பள்ளி விடுமுறை காலம் துவங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் மூணாறு, தேக்கடி உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு தேனி மாவட்டம் வழியாக செல்வர்.
இவர்கள் இங்கு வந்து உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, தரமான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் கிடைப்பதை உணவு பாதுகாப்பு துறையினர் உறுதி செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ராகவன், 'சில நாட்களாக ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் பகுதி பழக்கடைகளில் சோதனை செய்ததில் 350 கிலோ கெட்டுப்போன பழங்கள் பறிமுதல் செய்தும், கடைகளுக்ககு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்பூசணியில் செயற்கை ரசாயணம் சேர்க்கப்படுகிறா என கலெக்டர் உத்தரவில் ஆய்வு தீவிரப்படுத்தி உள்ளோம். மாவட்டத்தில் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் 30 செயல்படுகிறது. இதில் 10 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதில் சுகாதாரம், விதிமுறைகளை பின்பற்றாத இரு நிறுவனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவு விற்பனை செய்யும் இடங்களில் தரமற்ற உணவுகள், சுகாதாரம் பின்பற்றாமல் விற்பனை செய்தால் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

