/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பண்ணைகளில் ஆடாதொடை நொச்சி கன்றுகள் உற்பத்தி தீவிரம்
/
அரசு பண்ணைகளில் ஆடாதொடை நொச்சி கன்றுகள் உற்பத்தி தீவிரம்
அரசு பண்ணைகளில் ஆடாதொடை நொச்சி கன்றுகள் உற்பத்தி தீவிரம்
அரசு பண்ணைகளில் ஆடாதொடை நொச்சி கன்றுகள் உற்பத்தி தீவிரம்
ADDED : அக் 11, 2024 05:29 AM
தேனி: விவசாயிகளுக்கு வழங்குவதற்காக மாவட்டத்தில் கீழகூடலுார், பெரியகுளம், வைகை அணை ரோடு ஆகிய இடங்களில் ஆடாதொடை, நொச்சி கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி வேளாண் துறையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை பாதுகாக்க இயற்கை பூச்சி விரட்டிகளாகவும், வேலித்தாவரங்களாகவும் உள்ள நொச்சி, ஆடாதொடை கன்றுகள் ஆண்டிபட்டி, கடமலைகுண்டு, தேனி, பெரியகுளம், போடி வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு ஆடாதொடை 37,500, நொச்சி 82,500 என 1.20 லட்சம் கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இரு செடிகளின் கன்றுகளும் கீழகூடலுார் அரசு விதைப்பண்ணை, வைகை அணை ரோடு அரசு தென்னை நாற்றப்பண்ணை, பெரியகுளம் தோட்டக்கலைத்துறை நாற்றுப்பண்ணைகளில் உற்பத்தி செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆடாதொடை கன்றுகள் 8ஆயிரம், நொச்சி கன்றுகள் 7 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தேவையான விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.