ADDED : அக் 03, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கலை அறிவியல் கல்லுாரிகணினி அறிவியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.முதல்வர் ஐசக் பூச்சாங்குளம் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு, நிர்வாக இயக்குனர் பிஜோய் மங்களத்து முன்னிலை வகித்தனர்.
காந்திகிராம பல்கலை பேராசிரியர் சண்முகவடிவு, தெலுங்கானா எஸ்.ஆர்.எம்., பல்கலை பேராசிரியர் கோபிநாத்,
கோவை நேரு கலைக் கல்லுாரிபேராசிரியர் பிரதாப் சந்திரன் ஆகியோர் பேசினர். கயானாவில் இருந்து பேராசிரியர் சீலாலூர்துசாமி காணொளி மூலம் பங்கேற்றார். பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவ, மாணவிகள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவர் நர்மதாதேவி மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.-