ADDED : செப் 06, 2025 04:13 AM
பெரியகுளம்: பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பாக சர்வதேச மாநாடு நடந்தது.
'விமர்சன எல்லைகள் பாராம்பரிய வேர்களிலிருந்து சமகால உலகளாவியா கட்டமைப்புகள் வரை' என்ற தலைப்பில் நடந்தது.
கல்லூரி முதல்வர் இருதய கலைசெல்வம் தலைமை வகித்தார்.
செயலர் சாந்தா மேரி ஜொசிற்றா முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் ஜோஸ்பின் வரவேற்றார்.
பேராசிரியை ரெஜினாள் ஆய்வுக்கட்டுரை தொகுப்பினை வெளியிட்டார்.
இலங்கை ஈஸ்டர்ன் பல்கலை தொழில்நுட்பதுறை தலைவர் ரொஹான் சவரிமுத்து, மதுரை காமராஜ் பல்கலை ஆங்கிலம் மொழியியல் துறைத்தலைவர் ராஜேஷ், போடி ஏல விவசாயிகள் நலச்சங்க கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் பழனிவேல்சாமி ஆகியோர் பேசினர்.
மாநாட்டில் 30 பேராசிரியர்கள் 250 மாணவிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பு செயலாளர் மேரிசுபா நன்றி கூறினார்.-