ADDED : அக் 14, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி மேரி மாதா கலை அறிவியல் கல்லூரி, போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஆத்மா மனநல மையம் இணைந்து சர்வதேச மனநல தின ஊர்வலம் தேவதானப்பட்டியில் நடந்தது.
ஊர்வலத்தை கல்லூரி முதல்வர் ஐசக் பூச்சாக்குளம், துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு, நிர்வாக அலுவலர் பிஜோய் மங்களத்து கொடியசைத்து துவக்கி வைத்தனர். தேவதானப்பட்டி மெயின் ரோடு பகுதியில் ஊர்வலம் சென்றது. எஸ்.ஐ., வேல் மணிகண்டன், மனநல மையம் இயக்குனர் கரண் லூயிஸ், மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி உளவியல் துறையினர் செய்திருந்தனர். -