ADDED : ஜன 26, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி, :   போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் தமிழ் இலக்கியங்களில் மானுட வாழ்வியலும், மதிப்புகளும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.  முதல்வர் சிவக்குமார், நிர்வாக குழு உறுப்பினர் நந்தகுமார் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சுரேஷ்குமார் வரவேற்றார். விழாவில் கப்பலூர் அரசு கல்லூரி பேராசிரியர் சிங்காரவேலன்  பேசினார்.  பன்னாட்டு அளவில் ஆய்வாளர்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்பட்டன. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பால்பாண்டி, தனலட்சுமி, மாசிலாமணி, அங்கையற்கண்ணி, ரேணுகாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

