/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொறியியல் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்
/
பொறியியல் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்
ADDED : மே 09, 2025 05:53 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம் கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. கல்லுாரி செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தனர். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் ஆதிலிங்கம் வரவேற்றர். ஜம்மு ஐ.ஐ.டி., உதவிப்பேராசிரியர் சித்தார்த் மகேஸ்வரி, டேட்டா சயின்ஸ் தரவுகளை பயன்படுத்தி ஆராய்ச்சிகள் செய்வது பற்றி பேசினார். எலக்ட்ரனிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை தலைவர் வென்னிஸ்குமார் பேசினார். கருத்தரங்கில் 250 மாணவர்கள் பங்கேற்று, 100 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜ்மோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், துணைமுதல்வர்கள் சத்யா, மாதவன் உள்ளிட்டோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.