/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுதந்திரம் இல்லாததால் மக்கள் நம்பிக்கையை இழந்த போலீஸ் உதயகுமார் பேட்டி
/
சுதந்திரம் இல்லாததால் மக்கள் நம்பிக்கையை இழந்த போலீஸ் உதயகுமார் பேட்டி
சுதந்திரம் இல்லாததால் மக்கள் நம்பிக்கையை இழந்த போலீஸ் உதயகுமார் பேட்டி
சுதந்திரம் இல்லாததால் மக்கள் நம்பிக்கையை இழந்த போலீஸ் உதயகுமார் பேட்டி
ADDED : டிச 29, 2024 05:01 AM
தேனி: 'சுதந்திரம் இல்லாததால் மக்களிடம் போலீசார் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர் ',என சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
தேனியில் நடந்த அ.தி.மு.க., தொழிற்சங்க வேட்பு மனு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
அண்ணா பல்கலையில் நடந்த கொடூர சம்பவத்தை, அரசு எதுவும் நடைபெறாதது போல கடந்து போவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அரசிடமிருந்து எந்த பதிலும், நடவடிக்கையும் இல்லை.
விசாரணையே துவங்கவில்லை, அதற்குள் சென்னை கமிஷனர்,' ஒருவர் தான் குற்றவாளி, அவர் அலைபேசியில் பேசவில்லை' என்கிறார்.இது எழுதி வைத்ததை வாசித்தது போல் உள்ளது. இதனால் தான் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார். போலீசாருக்கு சுதந்திரம் இல்லாததால் மக்களிடம் நம்பிக்கையை இழந்து நிற்கிறது. எப்.ஐ.ஆர்., வெளியானதை நியாப்படுத்துகின்றனர். போலீசாரிடம் வழங்கும் தகவல் வெளியானால் புகார் கொடுத்தவர் குற்றவாளியிடம் இருந்து எப்படி தப்பிப்பது. வேறு யாரேனும் இச்சம்பவத்தில் தொடர்பு உள்ளதா, அவர்களை காப்பாற்ற திசை திருப்பு கின்றனரா என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
விஜயகாந்த் நினைவு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காதது கண்டனத்திற்கு உரியது. மற்ற தலைவர்களுக்கு வழங்கியது போல் வழங்கியிருக்க வேண்டும். பாரபட்சம் காட்டக்கூடாது என்றார்.

