UPDATED : ஜூலை 01, 2026 07:05 PM
ADDED : ஜூலை 01, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அரசு கலை,அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு வார அறிமுக பயிற்சி முகாம் கல்லூரி முதல்வர் மணிகண்டன் தலைமையில் துவங்கியது. கல்லூரி தமிழ் துறை தலைவர் அழகர்சாமி வரவேற்றார்.
மாணவர்களுக்கான வெற்றிப்படிகள் குறித்தும், சமுதாயத்தில் மாணவர்களின் பங்களிப்பு, எதிர்கால திட்டமிடல் குறித்தும் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசகர் மீனாட்சி சுந்தரம், இளங்குயில்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர் ஞானபாரதி ஆகியோர் பேசினர். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அறிமுகம் செய்தல் மற்றும் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை தமிழ் துறை பேராசிரியர்கள் விஜயா, பழனிச்சாமி ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியை ஜீனியராணி நன்றி கூறினார்.
