UPDATED : ஜூலை 01, 2026 07:08 PM
ADDED : ஜூலை 01, 2026 06:24 PM

போடி:போடியில் இருந்து கிராமப்பகுதிகளுக்கு செல்லும் ரோட்டில் ஆபத்தான வளைவுகளில் ஏற்படும் விபத்தை தவிர்க்க மஞ்சள் நிற உருளை தடுப்பான்கள் நெடுஞ்சாலைத் துறை மூலம் அமைக்கப்பட்டு உள்ளன.
போடி அருகே அம்மாபட்டி, சிந்தலைச் சேரி பிரிவு, மல்லிங்காபுரம் - ராசிங்காபுரம் இணைப்பு ரோடு அமைந்து உள்ளது. போடியில் இருந்து இப்பகுதிக்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட வானங்கள் சென்று வருகின்றன. அம்மாபட்டி, சிந்தலைச் சேரி பிரிவு வளைவான பாதையில் தடுப்புச்சுவர் இன்றி பெரும் பள்ளமாக இருந்தன. தெருவிளக்கு இன்றி இரவில் இருளில் மூழ்கி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வந்தனர்.
ஆபத்தான வளைவுகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க ரப்பரால் தயாரிக்கப்பட்ட மஞ்சள் நிற உருளை தடுப்பான்கள் நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர்.
