/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து
/
மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து
ADDED : அக் 13, 2024 05:26 AM
கடமலைக்குண்டு: வருஷநாடு மலைப்பகுதியில் அடுத்தடுத்து பெய்யும் மழையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மணல் பாங்கான பகுதிகளை மெதுவாக கடந்து வரும் நீர் இதுவரை வைகை அணை சென்று சேரவில்லை.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு, வெள்ளிமலை, வாலிப்பாறை, கோம்பைத்தொழு சார்ந்த மலைப் பகுதிகளில் அடுத்தடுத்து மழை பெய்கிறது. மழையால் மூல வைகை ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர் வரத்து தொடர்கிறது. மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் வாலிப்பாறை, முருக்கோடை, தும்மக்குண்டு, வருஷநாடு ஆகியவற்றை விரைவில் கடந்து விடும். வருஷநாட்டில் துவங்கி மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனூர் வரை ஆற்றில் மணல் பரப்பு அதிகம் இருப்பதால் தண்ணீர் மெதுவாக கடந்து செல்கிறது. மூல வைகை ஆற்று நீர் இதுவரை வைகை அணை சென்று சேராததால் வைகை அணை நீர்மட்டம் உயர்வதில் தாமதமாகிறது.