/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆர்.டி.ஐ., சட்ட மனுவிற்கு பதில் அளிக்காத வி.ஏ.ஓ.,விடம் விசாரணை
/
ஆர்.டி.ஐ., சட்ட மனுவிற்கு பதில் அளிக்காத வி.ஏ.ஓ.,விடம் விசாரணை
ஆர்.டி.ஐ., சட்ட மனுவிற்கு பதில் அளிக்காத வி.ஏ.ஓ.,விடம் விசாரணை
ஆர்.டி.ஐ., சட்ட மனுவிற்கு பதில் அளிக்காத வி.ஏ.ஓ.,விடம் விசாரணை
ADDED : மார் 18, 2025 05:45 AM
தேனி: தேனியில் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு (ஆர்.டி.ஐ.,) சரியாக பதில் அளிக்காத வி.ஏ.ஓ., விடம் கலெக்டர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது.
போடி அருகே உள்ள போ.மீனாட்சிபுரத்தில் பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக அக்கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் வி.ஏ.ஓ.,விடம் 2023 நவ.,ல் புகார் அளித்தார். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி 2024 அக்.,ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அளித்து கோரினார். ஆனால், வி.ஏ.ஓ., அசல் மனுவை திருப்பி அனுப்பியதுடன், தாலுகா அலுவலகத்தை அணுகுமாறு தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமை சட்ட மனுவை திருப்பி அனுப்பியது, பணிபுரியும் கிராமத்தில் வி.ஏ.ஓ., தங்குவதில்லை என்ற புகாரை ராமகிருஷ்ணன் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டத்தில் அளித்தார். விசாரணை உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
விசாரணையில் திருப்தி இல்லாததால் முதல்வர் பிரிவுக்கு ராமகிருஷ்ணன் மனு அனுப்பினார். அதனை தொடர்ந்து 2019ல் நீதிமன்ற உத்தரவில் கலெக்டர் அமைத்த வி.ஏ.ஓ.,க்கள் மீதான விசாரணைக்குழுவிற்கு இந்த மனு வந்தது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் மார்ச் 14ல் விசாரணை நடந்தது.
புகார்தாரர் ராமகிருஷ்ணன், வி.ஏ.ஓ., கண்ணனிடம் விசாரணை நடந்தது. ராமகிருஷ்ணன் கூறுகையில், 'வி.ஏ.ஓ.,க்கள் தவறு செய்தாலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அதனை மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு விசாரிக்கும்.
இந்த தகவல் பலருக்கு தெரியவில்லை. இந்த சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்', என்றார்.