/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுரையில் நாளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் 6 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அழைப்பு

ADDED : பிப் 15, 2024 02:53 AM
தேனி:மதுரையில் (பிப்.,16ல்) நாளை ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இதில் ஆறு மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு இல்லம்தேடி கல்வி, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள், பள்ளி செல்லாத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வருதல், பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகளை கண்டறிதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இத்துறைக்கு மாவட்டம் தோறும் இரு உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தற்போது மண்டல அளவிலான ஆய்வுகூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை மண்டல ஆய்வுக்கூட்டம் நாளை கருணாநிதி நுாற்றாண்டு நுாலகத்தில் காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.
கூட்டத்தில் பங்கேற்க மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உதவி திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.