UPDATED : நவ 11, 2026 05:39 PM
ADDED : நவ 11, 2026 05:34 PM
அ நிறம் | அளவு
தேனி: பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி வளாகத்தில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகத்தில் நவ., 24ல் இளைஞர்களுக்கான வேளாண் பணிக்கான ட்ரோன் இயக்க இலவச பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
பயிற்சியில் ட்ரோன் பயன்பாடு, செயல்படும் தொழில்நுட்பம், நேரடி செயல் விளக்கம், ட்ரோன் தொடர்பான வேலை வாய்ப்பு பற்றி விளக்கப்பட உள்ளது. காலை 10:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். இளைஞர்கள், வேளாண், தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://forms.gle./qP84Yzpxaqh3ZDWx8 என்ற ஆன்லைன் படிவத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 63791 40583 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக நிர்வாகி வசந்த் தெரிவித்துள்ளார்.
