/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழை சிப்பம் கட்டும் மையத்தை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
/
வாழை சிப்பம் கட்டும் மையத்தை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
வாழை சிப்பம் கட்டும் மையத்தை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
வாழை சிப்பம் கட்டும் மையத்தை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
ADDED : டிச 08, 2024 05:47 AM
தேனி : சின்னமனுாரில் அமைக்கப்பட்டுள்ள வாழை சிப்பம் கட்டும் மையத்தில் விவசாயிகள், விவசாய குழுக்கள் ஒப்பந்த முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் 6300 எக்டேரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஜி9, கதலி, நாழிப்பூவன், செவ்வாழை, கற்பூரவல்லி உள்ளிட்ட ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. வரத்து அதிகம் உள்ள காலங்களில் உரிய விலை கிடைக்கமால் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். இச் சூழலை சமாளிக்க தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.5.37 கோடி மதிப்பில் சின்னமனுார் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வாழை சிப்பம் கட்டும் மையம் கட்டப்பட்டுள்ளது.
இக்கூடம் பற்றி தோட்டக்கலை துணை இயக்குனர் கூறியதாவது: இந்த மையத்தில் 100 மெட்ரிக் டன் கொள்ளவு குளிர்சாதன சேமிப்பு கிடங்கு, 25 டன் கொள்ளளவு கொண்ட முன் குளிரூட்டும் அலகு உள்ளன. இங்கு தினமும் 30 முதல்40 டன் வரை விளை பொருட்களை கையாள முடியும். இம்மையம் வேளாண், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி ஆணையத்தின் மூலம் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தரச்சான்று பெறப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வாழை சிப்பம் கட்டும் மையத்தை விவசாயிகள், விவசாய குழுக்கள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி கொள்ளலாம். விண்ணப்பங்களை தேனியில் உள்ள தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தில் டிசம்பர் 16 க்குள் நேரில் அல்லது தபால் மூலம் வழங்கலாம் என்றார்.