/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரிடியம் விற்பனை: இரு கார்களில் வந்த ஏழு பேரிடம் விசாரணை
/
இரிடியம் விற்பனை: இரு கார்களில் வந்த ஏழு பேரிடம் விசாரணை
இரிடியம் விற்பனை: இரு கார்களில் வந்த ஏழு பேரிடம் விசாரணை
இரிடியம் விற்பனை: இரு கார்களில் வந்த ஏழு பேரிடம் விசாரணை
ADDED : டிச 23, 2024 04:49 AM
ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் சின்னமனுார் அருகே இரு கார்களில் இரிடியம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ஆண்டிபட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
தேனியில் இருந்து வந்த இரு கார்களை சோதனையிட்ட போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். சந்தேகமுற்ற போலீசார் காரை சோதனை செய்தனர்.
ஒரு காரில் இருந்த பெட்டியை திறக்கும்படி போலீசார் கூறினர். அப்பெட்டியில் இரிடியம் இருப்பதாகவும் முறையான பூஜை செய்த பின் தான் திறக்க வேண்டும் என்றும் அதில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து காரில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 7 பேரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரிக்கின்றனர்.
இரு கார்கள், அதில் இருந்த பெட்டியையும் கைப்பற்றினர்.
விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தேனி மாவட்டம் சின்னமனுாரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்து இரிடியம் வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இரிடியம் விற்பனை செய்த நபரின் விவரங்களை சேகரித்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
கைதானவர்களின் பெயர் விபரங்கள், பெட்டியில் இரிடியம் இருந்ததா என்பது குறித்த தகவலை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.