/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எரிவாயு மயானம் பராமரிப்பில் முறைகேடு:புகார் அளிக்க முடிவு
/
எரிவாயு மயானம் பராமரிப்பில் முறைகேடு:புகார் அளிக்க முடிவு
எரிவாயு மயானம் பராமரிப்பில் முறைகேடு:புகார் அளிக்க முடிவு
எரிவாயு மயானம் பராமரிப்பில் முறைகேடு:புகார் அளிக்க முடிவு
ADDED : டிச 19, 2025 05:38 AM
மூணாறு: மூணாறில் ஊராட்சிக்கு சொந்தமான சாந்தி வனம் எனும் எரிவாயு மயானம் பராமரிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மூணாறில் சைலன்ட்வாலி ரோட்டில் ஊராட்சிக்கு சொந்தமான சாந்தி வனம் எனும் எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் மயானத்தில் பராமரிப்பு பணிகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி நடந்தது.
அப் பணிகளுக்கு ஊராட்சி உதவி பொறியாளர் ரூ.15 ஆயிரம் மதிப்பீடு செய்தார். பணிகள் நடந்த பிறகு உதவி பொறியாளர் நடத்திய ஆய்வில் ரூ.16,500 செலவிடப்பட்டதாக தெரியவந்தது. ஆனால் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.1.5 லட்சம் செலவிடப்பட்டதாக கூறி அதிகாரிகள் நிதி ஒதுக்கியதாக தெரியவந்தது.
அதற்கு ஊராட்சியில் சில அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அதனை பொருட்படுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டது. அம்பலமானது. இது குறித்து விஜிலன்ஸ்சில் புகார் அளிக்க சிலர் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.