/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கு விபத்து காப்பீடு பத்திரம் வழங்கல்
/
மாணவர்களுக்கு விபத்து காப்பீடு பத்திரம் வழங்கல்
ADDED : மார் 12, 2024 11:53 PM
தேனி: அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் விபத்தில் மரணமடைந்தால் அரசு சார்பில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு பத்திரம் வழங்கப்படுகிறது.
இதில் மாணவர்கள் பெயரில் ரூ.75 ஆயிரம் மாநில நிதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்படுகிறது. அந்த நிதிக்கான வட்டியை மாணவர்கள் ஆண்டு தோறும் எடுத்துக்கொள்ள இயலும். அசல் தொகையை மாணவர்கள் 21 வயதிற்கு பின் எடுத்து பயன்படுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விபத்தில் பெற்றோரை இழந்த 30 மாணவர்களுக்கு நேற்று விபத்து காப்பீடு பத்திரத்தை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். டி.இ.ஓ.,(தொடக்க கல்வி) ஜான்சன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள்சாமி உடனிருந்தனர்.

