ADDED : மார் 05, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பட்டா வழங்கும் விழாவிற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மகாராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் பெரியகுளம் தாலுகாவை சேர்ந்த 60 பேர், ஆண்டிபட்டி 89, உத்தமபாளையம் 110 பேர், போடி 52 பேர், கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 754 பேர் என 1065 பேருக்கு ரூ.9.61 கோடி மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
மேலும் மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு ரூ.96 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, தேனி நகராட்சி தலைவர் ரேணுபிரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனிசப் கலெக்டர் முரளி, ஆர்.டி.ஓ.,க்கள் முத்துமாதவன், தாட்சாயினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

