/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ரூ.2.62 கோடி மதிப்பில் ராஜகோபுரம் 2026 ல் கும்பாபிேஷகம் நடத்த முடிவு

ADDED : அக் 12, 2025 05:40 AM

தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் ரூ.2.62 கோடி மதிப்பில் ராஜகோபுரம் அமைத்து, 2026 ஜனவரிக்குள் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறைதிட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீரபாண்டி முல்லைப் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது கவுமாரியம்மன் மற்றும் கண்ணீஸ்வரமுடையார் கோயில்கள். இக்கோயில்களில் 2014ல் கும்பாபிஷேகம் நடந்தது.
அதன்பின் 12 ஆண்டுகள் 2026 ஜனவரியில் நிறைவு பெறுகிறது. இதனால் கோயிலுக்கு ரூ.2.62 கோடி மதிப்பில் ராஜகோபுரம் அமைத்து, கோயில்வளாகம் முழுவதும் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் உதவி ஆணையர் ஒப்புதலுடன் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசின் அனுமதி கிடைத்தவுடன் ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
தற்போது கோயில் வளாகத்தில் தேர் நிலை நிறுத்தப்படும் இடம் சீரமைக்க ரூ.20.75 லட்சம் செலவில் பணி துவங்கியுள்ளன.
கண்ணாடி பைபர் ெஷட் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கவுமாரியம்மனின் தேர் 30 அடி உயரமாகும். தேர் நிலை நிறுத்தும் இடத்தில் சுற்றி 32 அடி உயரத்தில் தகர ஷெட் அமைக்க உள்ளோம்.
பெரிய கோயில்களில் உள்ள தேர் ஷெட் மாதிரி தகர ஷெட்டிற்கு நடுவில் தேரின் அழகை பொது மக்கள் பார்க்கும் வகையில் கண்ணாடி பைபர் இலைகள் பொருத்தி ஷெட் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அப்பணிகள் துவங்கி உள்ளன. இதனால் தேர் நிலை நிறுத்தும் இடத்தில் இருந்து நகர்த்தப்பட்டு, அம்மன் சன்னதிக்கு நேர் எதிரே, மழை வெயிலால் பாதிக்காமல் இருக்க தார்பாய் கவரால் மூடி நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.