/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நரியூத்து ஊராட்சி கிராமசபை கூட்டம் புறக்கணிப்பு; ரோட்டிற்கு வனத்துறை தடையை கண்டித்து

ADDED : அக் 12, 2025 05:39 AM
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் நரியூத்து ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு செல்லும் ரோடு 80 ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது.
சேதம் அடைந்த இந்த ரோட்டை புதுப்பிக்க தமிழக அரசு சமீபத்தில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கியது. இதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு நரியூத்து கிராமத்திற்கு செல்லும் ரோட்டை புதுப்பிக்கும் பணி துவங்கியது. ரோட்டில் ஒரு கி.மீ., தூரம் வனப்பகுதிக்குள் வருவதாக கூறி வனத்துறையினர் பணியை நிறுத்திவிட்டனர்.
அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பலமுறை இதுகுறித்து மனு கொடுத்தும் ரோடு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களுடைய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை ஆகிய அரசின் ஆவணங்களை ஒப்படைக்க போவதாக போஸ்டர் ஒட்டினர்.
இந்நிலையில் நேற்று நடப்பதாக இருந்த கிராம சபை கூட்டத்தில் நரியூத்து ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
கிராம சபை புறக்கணிப்பு குறித்து தகவல் அறிந்த ஊராட்சி உதவி இயக்குனர் முருகையா, மாவட்ட ஊராட்சி செயலாளர் குமரேசன், கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், மாணிக்கம் ஆகியோர் பொதுமக்களுடன் 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க மறுத்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.