/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த அங்கன்வாடி சீரமைப்பது அவசியம்
/
சேதமடைந்த அங்கன்வாடி சீரமைப்பது அவசியம்
ADDED : ஜூன் 04, 2025 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் 1060க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இங்கு குழந்தைகளுக்கு பள்ளி சார கல்வி கற்பிக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்குகின்றன. பல இடங்களில் அரசு கட்டடங்களில் செயல்படுகிறது.
இதில் பல அங்கன்வாடி கட்டடங்கள் கூரை சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து, சேதமடைந்த அங்கன்வாடி மையங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.