/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மெயின் குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்
/
மெயின் குழாய் உடைந்து குடிநீர் வீணாகும் அவலம்
ADDED : நவ 30, 2024 06:19 AM

கம்பம்; கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான ஊர்களுக்கு குடிநீர் வினியோகம் லோயர்கேம்பில் இருந்து பம்பிங் செய்து விநியோகம் செய்யப்படுகிறது.
புதுப்பட்டி அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப் புரம், தேவாரம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கும், நூற்றுக்கணக்கான ஊராட்சிகளுக்கும் குடிநீர் வாரியம் குடிநீர் சப்ளை செய்து வருகிறது. இதற்கென லோயர்கேம்பிலிருந்து 50 கி.மீ. தூரத்திற்கும் மேலாக பகிர்மான குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
கடந்த வாரம் கம்பம் வாரச்சந்தை அருகில் ஏர் வால்வு உடைந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது. நேற்று முன்தினம் கம்பம் மெயின்ரோட்டில் சேனை ஓடையில் குடிநீர் வாரிய பகிர்மான குழாய் உடைந்து குடிநீர் ஆறாய் ஓடியது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.