/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பேரூராட்சி குப்பையை தீ வைக்கும் அவலம்
/
பேரூராட்சி குப்பையை தீ வைக்கும் அவலம்
ADDED : டிச 18, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : க.புதுப்பட்டி பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்க வள்ளியம்மன் குளத்திற்கு மேல்புறம் குப்பை பிரிக்கும் மையம், நுண் உரக் கூடம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் சேகரமாகும் குப்பைகளை அருகில் உள்ள ஓடையில் கொட்டி தீ வைத்து விடுகின்றனர். இதனால் சுற்றுச் சூழல் மாசு படுகிறது.
அருகில் தோட்டங்களில் உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். இதுபோல் அனுமந்தன் பட்டி பேரூராட்சி பணியாளர்களும் குப்பைகளை தீ வைத்து எரித்து வருகின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.