/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி, பேரூராட்சிகளில் ஆடுவதைக்கூடங்கள் இருந்தும் பயனில்லை; சுகாதார கேடுடன் திறந்தவெளியில் இறைச்சி விற்கும் அவலம்

ADDED : அக் 12, 2025 04:55 AM
போடி : மாவட்டத்தில் நகராட்சிகள், சில பேரூராட்சிகளில் ஆடுவதை கூடங்கள் இருந்தும் திறந்த வெளியில் ஆடுவதை செய்வது தொடர்கிறது. கால்நடை டாக்டர்கள் சான்று பெற்று கால்நடைகளை வதை செய்வதையும், இறைச்சி கடைகள் சுகாதாரமாக செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் ஆடுவதைக்கான நவீன இறைச்சி கூடம் அமைந்துள்ளது. இக் கூடம் அதிகாலை 5:00 முதல் காலை 10:00 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். இங்கு ஆடுகள், மாடுகள் வதை செய்வதற்கு முன் நோய் இன்றி சுகாதாரமான முறையில் உள்ளதா என்பதை கால்நடை டாக்டர் பரிசோதித்து சான்று அளிக்க வேண்டும். அதன்பின் வதை செய்து சுகாதார ஆய்வாளர் சான்று அளித்து இறைச்சி கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். கால்நடைகளை பரிசோதனை செய்யும் டாக்டர்களுக்கு உள்ளாட்சிகள் ஊக்கத் தொகை வழங்கப்படும். பரிந்துரைத்த இடங்கள் தவிர வேறு எங்கும் ஆடுவதை, விற்பனை செய்தால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் உள்ளாட்சிகளில் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் நடைமுறை இதுவரை அமல்படுத்த வில்லை.
இதனால் இறைச்சி விற்பனை செய்வோர் ஆடுவதை கூடங்களுக்கு கூட செல்லாமல் தெருக்கள், வீதிகளில் அவரவர் கடைகள் முன்பு திறந்த வெளியில் ஆடுகளை வதை செய்கின்றனர். வதை செய்யும் ஆடுகள் நோய் இல்லாத நிலையில் உள்ளதா என்பது கூட தெரிவதில்லை. சுகாதார அதிகாரிகள் இதனை கண்டு கொள்வது இல்லை. ஆனால் நோய் பாதித்த ஆட்டின் இறைச்சியை சாப்பிடுவோர் பாதிக்கப்படுகின்றனர். தேவாரம், கோம்பை, ஆண்டிபட்டி உட்பட சில பேரூராட்சிகளில் ஆடுவதை கூடம் இருந்தும் செயல்படாத நிலை உள்ளது.
ஆனால் நகராட்சிகளில் ஆடுவதை கூடம் டெண்டர் எடுத்தவர்கள் இறைச்சி கடைகளில் தினமும் கட்டணம் வசூல் செய்கின்றனர். மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் ஆடுவதை கூடம் இல்லை. பேரூராட்சி, ஊராட்சிகளில் சுகாதாரமான முறையில் ஆடுகள் செய்வதையும், குறைந்தபட்சம் நகராட்சி பகுதிகளிலாவது கால்நடை மருத்துவர்களிடம் ஆடுகளுக்கு சான்று பெற்று வதை செய்யும் நடைமுறையை பின்பற்றிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.