/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் 'எல்லோ அலர்ட்' நீர்நிலை சுற்றுலா நிறுத்தம்
/
இடுக்கியில் 'எல்லோ அலர்ட்' நீர்நிலை சுற்றுலா நிறுத்தம்
இடுக்கியில் 'எல்லோ அலர்ட்' நீர்நிலை சுற்றுலா நிறுத்தம்
இடுக்கியில் 'எல்லோ அலர்ட்' நீர்நிலை சுற்றுலா நிறுத்தம்
ADDED : அக் 12, 2025 03:24 AM

மூணாறு: இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று பலத்த மழைக்கான' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டதால் மதியத்திற்கு பிறகு நீர் நிலை சுற்றுலாக்கள் நிறுத்தப்பட்டன.
கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில் நேற்று இடுக்கி, பத்தனம்திட்டா,
பாலக்காடு, மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான' எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.அதன்படி இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பூப்பாறை, தோண்டிமலை ஆகிய பகுதிகளில் பெய்த பலத்த மழையால் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் சிறிய அளவில் மண்சரிவுகள் ஏற்பட்டன.
நிறுத்தம் நேற்று மதியம் 1:00 மணி முதல் சுற்றுலா படகுகள் உட்பட நீர்நிலை சுற்றுலாக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.