/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு
/
பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு
ADDED : அக் 06, 2024 03:50 AM
தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. கூடுதல் எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்திரா முன்னிலை வகித்தார்.
கலெக்டர் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள், தொழிற்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். 5 தாலுகாக்களில் வருவாய், கலால், போலீஸ், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை அலுவலர்களை கொண்ட தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இவர்களுக்கு பயிற்சி வகுப்பு அக். 7 ல் நடக்க உள்ளது.
பட்டாசு கடைகள், தொழிற்சாலைகளில் முறையாக இக்குழுவினர் ஆய்வு செய்து, பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்., என்றார்.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் புகழேந்தி, துணை இயக்குனர் அமர்நாத், உதவி இயக்குனர் மணிமாறன், அலுவலக குற்றவியல் மேலாளர் பீரதீபா, தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் விவேகானந்தன், உதவி மாவட்ட அலுவலர் குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.