/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐ.டி.ஐ., முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
ஐ.டி.ஐ., முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : மே 13, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சிவகாமி முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் வீரஜக்கு வரவேற்றார்.
விழாவில் கலெக்டர் நேர்முக உதவியாளர்(கணக்கு) முகமது அலி ஜின்னா, பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற உதவி செயற்பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பங்கேற்றவர்கள் தங்கள் பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். விழாவை முன்னாள் பயிற்சியாளர்கள் பேரவை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.