ADDED : ஏப் 04, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: உத்தமபாளையம் கருப்பணசாமி கோயில் மலைக்குன்றின் அடிவாரத்தில் சமணர் சிற்பங்கள் உள்ளன.
சமணர் வாழ்ந்த குகைகள், அவர்கள் பயன்படுத்திய குடிநீர் சுணை, மருந்துகள் அரைத்தகற்கள் இன்னமும் உள்ளன.
தொல்லியல்துறை கையகப்படுத்தி பாதுகாத்து வருகிறது.
ஆனால் காவலர்கள் இல்லாததால், மது அருந்துபவர்கள் இந்தஇடத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மதுபாட்டில்கள், டம்ளர், சிகரெட் துண்டுகள் அங்கு குவிந்துள்ளன. புராதன சின்னத்தை பாதுகாக்கவும், சமூக, விரோதிகள் அங்கு அமர்ந்து மது அருந்துவதை தடுக்க போலீசார் முன்வரவேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.