ADDED : ஏப் 23, 2025 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனியில் மதுரை ரோட்டில் பென்னிகுவிக் நகர்பிரிவு முதல் பங்களாமேடு வரை ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது.
இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் சரவணன், பெத்தணக்குமார், மோகன், ராம்குமார், முத்துக்குமார், ரவிக்குமார், சுருளியம்மாள், பெரியசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ராமசந்திரன் உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.