/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுார் ஒன்றியத்தில் 'ஜல்ஜீவன்' பணிகள் முடக்கம்
/
சின்னமனுார் ஒன்றியத்தில் 'ஜல்ஜீவன்' பணிகள் முடக்கம்
சின்னமனுார் ஒன்றியத்தில் 'ஜல்ஜீவன்' பணிகள் முடக்கம்
சின்னமனுார் ஒன்றியத்தில் 'ஜல்ஜீவன்' பணிகள் முடக்கம்
ADDED : ஜூலை 19, 2025 11:52 PM
சின்னமனுார்: சின்னமனுார் ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளில் 'ஜல் ஜீவன்' திட்டப் பணிகள் அரைகுறையாக முடங்கி உள்ளன.
வீடுதோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மத்திய அரசு, 'ஜல் ஜீவன்' திட்டத்தை அறிமுகம் செய்தது. முதலில் கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப ரூ.5 லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை ஒதுக்கீடு செய்தது. தற்போது பேரூராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊராட்சிகளில் ஒப்பந்த புள்ளி எடுத்தவர்கள் பணிகளை நிறைவு செய்யாமல் சென்றுள்ளனர். பகிர்மான குழாய் பதிப்பது, மேல்நிலை தொட்டிகள் கட்டுவது, உறைகிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களிலும் பணிகள் நிறைவு பெறாத நிலை தான் உள்ளது. குறிப்பாக சின்னமனுார் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளிலும் பணிகள் அரைகுறையாகவே உள்ளன. பெரும்பாலான ஊராட்சிகளில் பணிகள் முடங்கி உள்ளன. சீப்பாலக்கோட்டை, புலிகுத்தி, அய்யம்பட்டி, முத்துலாபுரம், காமாட்சிபுரம், எரசை உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் அரைகுறையாக நடந்துள்ளது. பதவியில் இருந்த போது, ஊராட்சி தலைவர்கள் இதுதொடர்பாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தும், அப்போதிருந்த கலெக்டரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பின் அதே நிலை தொடர்கிறது. ஜல் ஜீவன் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்.