ADDED : ஏப் 14, 2025 06:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பங்களா மேட்டில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. சபை தலைவர் முகமது ஹனீப் தலைமை வகித்தார்.
சபை பொருளாளர் அன்வர் அலி, தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், எஸ்.டி.பி.ஐ., மாவட்டத் தலைவர் அபுபக்கர்சித்திக், காங்., நகரத் தலைவர் கோபிநாத், வி.சி.க., நகரத் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அல்லிநகரம் பஸ் ஸ்டாப்பில் நாம்தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு தலைமை வகித்தார். நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

